உள்ளூர் செய்திகள்
ரெயிலில் சிக்கி தொழிலாளி கால் துண்டானது
- தவறி விழுந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 55). இவர் சென்னையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.
இவர் ஈரோடுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை ரெயில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் அருகே வரும்போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் ராஜீவ் காந்தி ரெயிலில் சிக்கி கால் துண்டானது. படுகாயம் அடைந்து அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.