உள்ளூர் செய்திகள்
கிணற்றில் இருந்து 6 அடி நீள நாகபாம்பு மீட்பு
- தீயணைப்பு துறையினர் கருவி மூலம் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி, புகலைக்காரன் வட்டம் பகுதியில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 6 அடி நீளம் உள்ள நல்லபாம்பு ஒன்று விழுந்து சுருண்டு கிடந்தது.
இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதி பிரகாசம் என்பவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கருவி மூலம் நல்லபாம்பை மீட்டனர்.
பின்னர் அதனை கோணிப்பை மூலம் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.