உள்ளூர் செய்திகள்

கோவையிலிருந்து வந்த ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஒலிம்பியாட் செஸ் ஜோதி திருப்பத்தூருக்கு வந்தடைந்தது

Published On 2022-07-26 14:56 IST   |   Update On 2022-07-26 14:56:00 IST
  • ஆகஸ்ட் 10-ந் செஸ் போட்டி நடக்கிறது
  • பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை கலெக்டர் பார்வையிட்டார்.

திருப்பத்தூர்:

கோவையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா வரவேற்றார் மாமல்லபுரத்தில் வரும் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி கோவையிலிருந்து நேற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா பெற்றுக்கொண்ட பின்னர் ஜோதியை ஏந்தியபடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகவை திட்ட இயக்குனர் கு. செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் ஆகியேர் இருந்தனர்.

முன்னதாக திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உட்பட கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News