உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு
- நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்
- அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.