உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா
- காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் பானு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.