உள்ளூர் செய்திகள்

வித்தியாசமான திருமண வாழ்த்து பேனர்

Published On 2023-09-19 15:28 IST   |   Update On 2023-09-19 15:28:00 IST
  • போலீசார் எச்சரிக்கையால் அகற்றம்
  • இளைஞர்கள் பேனரை அப்புறப்படுத்தினர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோனாமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக்- அனுஸ்ரீ ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.

அவர்களுடைய திருமணத்திற்காக மணமக்களின் நண்பர்கள் திருமண நாளிதழ் என்ற பெயரில் மணமகளின் மனதை திருடி காதலித்ததற்காக மணமகனுக்கு பெற்றோர்களால் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று பேனர் வைத்துள்ளனர்.

மேலும் அதில் பேனரை வைத்த அந்த பகுதி இளைஞர்கள் குறித்தும் அச்சடிக்கப்பட்டு பேனர் வைக்கப்ட்டு இருந்தது.

அந்த வழியாக செல்பவர்கள் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள பேனரை பார்த்து, படித்து விட்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேனர் வைத்தவர்களை எச்சரிக்கை செய்தனர். உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். இதனை அடுத்து அந்த பகுதி இளைஞர்கள் பேனரை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News