வாணியம்பாடியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.
எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
வாணியம்பாடி:
அ.தி.மு.க. சார்பில், நடந்து முடிந்த கட்சியின் பொதுக்குழுவில், கட்சியின் இடை கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வரும் 9-ந் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு, சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை செல்கிறார்.
அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில், நாட்றம்பள்ளி பஸ் நிலையம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்க முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படஉள்ளது.
அதுசமயம் அதிமுக கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவுசங்க பிரதிநிதிகள், முன்னாள் ஊராட்சி செயாளர்கள், கிளை கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொள்ள வேண்டுமென, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளருமான கோ.செந்தில் குமார் எம். எல்.ஏ, கேட்டுக்கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக வாணியம்பாடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.