உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை

Published On 2023-02-27 10:10 GMT   |   Update On 2023-02-27 10:10 GMT
  • நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
  • பேனர்கள் அகற்றும் பணி தொடரும்

வாணியம்பாடி:

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனுமதியின்றி அதிக அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நகரமைப்பு அலுவலர் சண்முகம், நகரமைப்பு ஆய்வாளர் பாலாஜி, அல்லிமுத்து, சுகாதார ஆய்வாளர் செந்தில், நகராட்சி பணியாளர்கள் சரவணன், தயாளன் உள்ளிட்டோர், வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் வாணியம்பாடியின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றினர்.

மேலும் வாணியம்பாடியின் அனைத்து பகுதிகளிலும் இதேபோல் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றும் பணி தொடரும் என்றும், தொடர்ந்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Tags:    

Similar News