உள்ளூர் செய்திகள்
சாலை பள்ளத்தில் குடிநீர் லாரி சிக்கியது
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பஸ் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இன்று காலை அந்த வழியாக சென்ற ஆம்பூர் நகராட்சி குடிநீர் லாரி சிக்கிக்கொண்டது.
நீண்ட நேரம் ஆகியும் லாரி வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் காலை ஆறு 6 முதல் 7 மணி வரை கடும் போக்குவரத்து பாதித்தது.
பஸ் பயணிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்தை மாற்றம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.