குடியிருப்பு பகுதிகளில் புகுந்த 4 பாம்புகள் பிடிபட்டது
- வனத்துறையிடம் ஒப்படைப்பு
- காப்பு காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் அருகே உள்ள மம்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ரஷீத். இவர் வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளைத்து பிடித்தனர்.
அதேபோல் நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவை சேர்ந்த ராணுவ வீரர் வினோத் வீட்டில் இருந்த 6 அடி நீலமுள்ள நாகப்பாம்பு, புதுப்பேட்டை பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவர் வீட்டில் புகுந்த 3 அடி நீளம் உள்ள நாக பாம்பு, ஆத்தூர்குப்பம் அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு உள்ளிட்டவை களையும் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட அனைத்து பாம்பு களையும் வனத்துறையினர் எடுத்து சென்று காப்பு காட்டில் விட்டனர்.