உள்ளூர் செய்திகள்

அமரர் ஊர்தியில் இருந்து பூக்கள் கொட்டவும், வழியில் பட்டாசு வெடிக்கவும் தடை

Published On 2023-02-20 08:00 GMT   |   Update On 2023-02-20 08:00 GMT
  • குமாரபாளையம் மின் மயானத்திற்கு வரும் அமரர் ஊர்தியிலிருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் தினசரி பலமுறை பூக்களை தூவி வருகின்றனர்.
  • அமரர் ஊர்தியில் மாலைகள் ஏற்றக்கூடாது. சாலையில் பூக்கள் வீசக்கூ டாது. அப்படி வீசினால் துக்க வீட்டினருக்கு அபரா தம் விதிக்கப்படும். அமரர் ஊர்தி ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் மின் மயானத்திற்கு வரும் அமரர் ஊர்தியிலிருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் தினசரி பலமுறை பூக்களை தூவி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் பூக்கள் தூவுதல், பட்டாசுகள் வெடித்தல் ஆகியவை தொடர்ந்து நடந்து

வருவதால், தெருக்களில் அசுத்தம் ஏற்படுகிறது.

வழியில் உள்ள மக்களுக்கு அடிக்கடி சாலையை சுத்தம் செய்யவே சரியாக உள்ளது. இறந்தவர் உடல்மீது போடப்பட்ட மாலைகள் என்பதால், இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் கொடுத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் விஜயகண்ணன் மயானத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் மயான ஊழியர்களிடம் கூறியதாவது:-

அமரர் ஊர்தியில் மாலைகள் ஏற்றக்கூடாது. சாலையில் பூக்கள் வீசக்கூ டாது. அப்படி வீசினால் துக்க வீட்டினருக்கு அபரா தம் விதிக்கப்படும். அமரர் ஊர்தி ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்.

சடலம் எரியூட்ட வருவோரிடம் சாலைகளில் பூக்களை வீச மாட்டோம் என உறுதிமொழி படிவம் பெற்றுக்கொண்டு, எரியூட்ட பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News