உள்ளூர் செய்திகள்

திருடிய செல்போனை திருப்பி கொடுக்க ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டல்

Published On 2023-10-06 08:33 GMT   |   Update On 2023-10-06 08:33 GMT
  • போட்டோ எடுக்க முயன்றபோது ரவிபிரகாஷ் மீது கல்வீசி தாக்கினர்
  • கோவையில் ரகளையில் ஈடுபட்ட 3 திருநங்கைகள் கைது

கோவை,

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (வயது 31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ரவிபிரகாஷ் சம்பவத்தன்று இரவு சாய்பாபாகாலனியில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்றார். அப்போது அவரது செல்போனை யாரோ சிலர் அபேஸ் செய்து விட்டனர்.

எனவே அதிர்ச்சி அடைந்த ரவிபிரகாஷ் உடனடியாக சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்க சென்றார்.

அங்கு போனின் ஐ.எம்.இ.ஐ நம்பர் வேண்டும் என்று போலீசார் கேட்டு உள்ளனர். எனவே ரவிபிரகாஷ் வேறு வழியின்றி வீடு திரும்பினார்.

இந்தநிலையில் அவர் தொலைந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசியவர், உன் போன் என்னிடம் தான் உள்ளது. ரூ.10 ஆயிரம் உடன் வா என்று நிபந்தனை விதித்து உள்ளார்.

தொடர்ந்து ரவிபிரகாஷ் பூ மார்கெட்டுக்கு சென்றார். அங்கு 3 திருநங்கைகள் இருந்தனர். அவர்கள் ரூ.10 ஆயிரம் கேட்டனர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என ரவிபிரகாஷ் கூறினார்.

அப்போது ரூ.3000 கொடுத்து விட்டு போனை வாங்கி செல் என்று மிரட்டினார்கள். ரவிபிரகாஷ் ரூ.1500 தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளவில்லை.

எனவே அவர் 3 பேரையும் போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை ரோட்டில் வீசியெறிந்து கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை திருடி ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து 3 திருநங்கைளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News