உள்ளூர் செய்திகள்

கார்பரேட் சலூன், பியூட்டி பார்லர்களால் ஆயிரக்கணக்கான சவரத் தொழிலாளர் பாதிப்பு

Published On 2023-02-07 18:48 IST   |   Update On 2023-02-07 18:48:00 IST
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
  • சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.

மாமல்லபுரம்:

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், இன்று மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக மாநகராட்சி பகுதியில் உள்ள கார்பரேட் சலூன், அழகு நிலையங்களால் ஏற்படும் தொழில் பாதிப்பு, அறநிலையத்துறை கோயிலில் நாதஸ்வரம், மேளம் வாசிப்போரை அரசு ஊழியர்கள் ஆக்குவது, நகராட்சி கடைகளின் வரியை சீறமைப்பது, உள்ளிட்டவை நிறைவேற்றபட்டுள்ளது. சங்கத்திற்கு என புதிய இணையதளம் துவங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மாநில பொது செயலாளர் கரியப்பா டி.கே.ராஜா, பொருளாளர் எஸ்.நடராஜன், செங்கை, காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் ருக்மாந்தகன், சண்முகம், ராஜீவ்காந்தி உட்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News