உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.   

சாத்தான்குளம் அருகே சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-06-11 15:23 IST   |   Update On 2022-06-11 15:23:00 IST
  • சாத்தான்குளம் அருகே சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் டெங்கு களபணி ஆய்வு செய்யப்பட்டது. கடைகளில் அயோடின் உப்பு விற்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கட்டாரிமங்கலத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், கட்டாரிமங்கலம் ஊராட்சி செயலர் வெங்கடேசன் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், மரக்கன்றுகள் நட்டு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொற்று நோய் பரவாமல் இருக்க தூய்மையை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து டெங்கு களபணி ஆய்வு செய்யப்பட்டது. கடைகளில் அயோடின் உப்பு விற்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து கட்டாரிமங்கலத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு நெல்லை நீர் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. நீர் தன்மை குறித்தும், தகவல் வந்ததும் அதற்காக நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News