உள்ளூர் செய்திகள்

சக்கரம் கழன்று ஓடிய டிராக்டரை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்.

கரும்பு ஏற்றி வந்த போது விபத்து நடுரோட்டில் டிராக்டர் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

Published On 2022-09-29 07:25 GMT   |   Update On 2022-09-29 07:25 GMT
  • டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றது.
  • செல்லும்போதே டிராக்டர்சக்கரம் கழன்று ஓடியது.

கடலூர்:

விழுப்புரம்மாவட்டம்திருவெண்ணைநல்லூர்பகுதியில் இருந்து, நேற்று மாலை, நெல்லிக்குப்பம் ஆலைக்கு, டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றுகொண்டு இருந்தது டிராக்டரைசுரேஷ் ஓட்டிவந்தார். பண்ருட்டிலிங்க் ரோடு செவன்த் டே பள்ளி முன்பு செல்லும்போது டிராக்டர்சக்கரம்கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் டிராக்டர் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்த படி நின்றது. அப்போது அந்த வழியாகவந்தபயணிகள் அலறியடித்து ஓடினர்.

கழன்ற சக்கரம் சிறிது தூரம் ஓடி விழுந்தது. இதனால்அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. டிராக்டரை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. அப்போது நடுரோட்டில் டிராக்டர் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துபோக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீசார் பாலாஜி சம்பவத்திற்கு இடத்திற்கு விரைந்து சென்றுவாகனங்களை மாற்று வழியாக திருப்பி விடப்பட்டனர்.பின்பு ஜெசிபி இயந்திரத்தை வரவழைத்து டிராக்டரை அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News