உள்ளூர் செய்திகள்

தெப்பதேரோட்டம் நடந்த போது எடுத்த படம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தெப்ப தேரோட்டம்

Published On 2023-02-11 09:28 GMT   |   Update On 2023-02-11 09:28 GMT
  • சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை கடைசி வெள்ளிக்கிழமை அன்று தெப்ப தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
  • தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை கடைசி வெள்ளிக்கிழமை அன்று தெப்ப தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தெப்ப தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் ஓடை தெருவில் ஆவுடை பொய்கை தெப்பத்தில் எதிரே உள்ள உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஆவுடை பொய்கை தெப்பத்தில் இரவு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராஜா எம்.எல்.ஏ, கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News