உள்ளூர் செய்திகள்
அடகுவைத்து மீட்கப்பட்ட 2 பவுன் நகை திருட்டு
- கைப்பையில் வைத்து தனது ஊருக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.
- 2பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி செங்கமேட்டை சேர்ந்தவர் ஆபரணம் (வயது 47). இவர் அடகு வைத்த 2 பவுன் தங்க நகையை மீட்டு தனது கட்டப்பைக்குள் கைப்பையில் வைத்து தனது ஊருக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.
பின்னர் கட்டப்பையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கைப்பை மற்றும் அதிலிருந்து 2பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.