உள்ளூர் செய்திகள்

உடைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு பெட்டி.

கோவில்பட்டி அருகே கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-11-02 13:27 IST   |   Update On 2022-11-02 13:27:00 IST
  • கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்தார்.
  • கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்து அங்கிருந்த அம்மனின் ஒரு கிராம் பொட்டு தங்கத்தை திருடியுள்ளார். பின்னர் கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த திருடன் திருட கொண்டு வந்த பொருட்களை கோவிலிலேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டான். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News