செய்துங்கநல்லூர் அருகே ஆடு திருடிய வழக்கில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- கடந்த டிசம்பர் 30-ந் தேதி தோட்டத்தில் இருந்த காவலாளிகளை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்த 37 ஆடுகளை திருடி சென்றனர்.
- இதனையடுத்து முத்து பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
செய்துங்கநல்லூர்:
செய்துங்கநல்லூர் தென்னஞ் சேலை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு தெற்கு காரசேரி பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு அவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
கடந்த டிசம்பர் 30-ந் தேதி தோட்டத்தில் இருந்த காவலாளிகளை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்த 37 ஆடு களை திருடி சென்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நாங்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த முத்து என்ற முத்துபாண்டி (வயது28) மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரை சேரகுளம் சப்-இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் தலைமையில் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த ஆடு திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்து என்ற முத்துபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து முத்து பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து முத்து என்ற முத்துபாண்டியை சிறையில் அடைத்தார்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்த சப்-இன்க்ஸ்பெக்டர் அல்லி அரசன் மற்றும் போலீசாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.