உள்ளூர் செய்திகள்

கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி

நெல்லையில் நாளை மறுநாள் முதல் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் - கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தகவல்

Published On 2023-02-25 09:33 GMT   |   Update On 2023-02-25 09:33 GMT
  • சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் குறித்த விபரங்களை புதிதாக கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
  • அவர்கள் சிரமம் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க அரசால் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதி யில் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் குறித்த விபரங்களை புதிதாக கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

சாலையோர வியாபாரிகள்

இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டத்தின் கீழ் தகுதியான சாலையோர வியாபாரி களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட புதிய கணக் கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அவர்கள் சிரமம் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க அரசால் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பகுதியில் நாளை மறுநாள் (திங்கட் கிழமை) முதல் மார்ச் மாதம் இறுதி வரையிலும் கணக் கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

ஆவணங்கள்

எனவே கணக்கெடுப்பு பணியாளர்கள் கேட்கும் விபரங்கள், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற ஆவணங்களை பணி செய்ய வரும் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News