உள்ளூர் செய்திகள்

பள்ளி வளர்ச்சி கட்டிடத்திற்கு நிதி வழங்கப்பட்டது.

அரசு பள்ளியில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2023-07-29 09:53 GMT   |   Update On 2023-07-29 09:53 GMT
  • ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
  • மீதமுள்ள 2 பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் முயற்சியில் அடிப்படைத் தேவைகள் மற்றும் கட்டுமான பணிகளை மாணவ, மாணவிகளின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் பல்வேறு கட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் முருகேசன் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் கொடுத்தார்.அதன் ஒரு கட்டமாக பள்ளி வளாகத்தில் தரைத்தளம் (பேவர் பிளாக்) அமைக்க முடிவெடுக்கப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு நிதியினை பள்ளி மேலாண்மை குழு சார்பாக வழங்குவது என்றும், மீதமுள்ள இரண்டு பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு தலைவி சுகன்யாவின் கோரிக்கையை அடுத்து, அந்த வார்டு உறுப்பினர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெயபாரதி விஸ்வநாதன், தற்போதைய நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், இந்தப் பணியினை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜையின் போது நகராட்சி ஆணையர் முருகன், பொறியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News