உள்ளூர் செய்திகள்
- இடப்பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.
- ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குபதிவு செய்து குருராஜை கைது செய்தார்.
திருவோணம்:
ஒரத்தநாடு அருகே உள்ள பருத்தியப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் குமார்.
இவரது மனைவி கல்பனா (வயது 40).
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குருராஜ் என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் குருராஜ், உருட்டு கட்டையால் கல்பனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த கல்பனா ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து, குருராஜை கைது செய்தனர்.