புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை படத்தில் காணலாம்.
கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள்
- மேல்நிலைநீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யவில்லை.
- பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள ரெட்டியூர், வி.செட்டி ஏரிபள்ளம், சமத்துவபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு ஒன்றிய பொதுநிதியிலிருந்து கடந்த 20-2021ம் ஆண்டில் ரெட்டியூர் கிராமத்தில் உள்ள 30ஆயிரம் லிட்டர் நீர்தேக்க தொட்டியிலிருந்து வி.செட்டிஏரி பள்ளம் வரை ஒகேனக்கல் குடிநீர் வழங்க 2.40 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட பகுதி புதர்மண்டி கிடக்கிறது.
மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிராமமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஒகேனக்கல் குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகள் குடிநீர் இன்றி தவித்து வருகிறோம். எங்கள் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைநீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யவில்லை.
இது குறித்து நாங்கள் பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நீர் தேக்க தொட்டி கட்சி மோதலால் இந்த பகுதியில் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.