உள்ளூர் செய்திகள்

மரத்தை வெட்டி கடத்திய 15 பேருக்கு ஜெயில்

Published On 2023-01-25 15:15 IST   |   Update On 2023-01-25 15:15:00 IST
  • ஏற்காட்டில் இருந்து சில்வர் ஓக் மரங்களை வெட்டி கடத்தி வந்த 7 லாரிகளை அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ. மடக்கி பிடித்து, வனக்காப்பாளர் ெஜயக்குமாரிடம் ஒப்படைத்தார்.
  • இது தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி ெஜயக்குமார் என்ற வனக்காப்பாளர் பணியில் இருந்தார்.

அப்போது ஏற்காட்டில் இருந்து சில்வர் ஓக் மரங்களை வெட்டி கடத்தி வந்த 7 லாரிகளை அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ. மடக்கி பிடித்து, வனக்காப்பாளர் ெஜயக்குமாரிடம் ஒப்படைத்தார்.

இதனிடையே அதற்கு அடுத்த நாள் இரவு சோதனைசாவடிக்கு வந்த லாரி டிரைவர்கள் அய்யப்பன், சத்திய மூர்த்தி, பெரியபையன், சபரிவேல், குமார், செல்வராஜ் உள்பட 17 பேர் ஒன்று சேர்ந்து, அங்கு பணியில் இருந்த வனகாவலரை மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் சோதனை சாவடியின் கேட்டை உடைத்து லாரிகளை எடுத்துச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, வழக்கில் தொடர்புடைய 17 பேருக்கும் 2 வருடம் 7 மாத சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.2.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெரிய பையன், சித்தை–யகவுண்டர் ஆகியோர் இறந்து விட்டனர். மற்றவர்களை ெஜயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News