உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
- கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
- மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையில் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையில் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கோத்தகிரி சேட்லைன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த வீட்டின் சிமெண்ட் கூரையும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இது போன்ற பாதிப்புகள் பல பகுதிகளில் ஏற்பட்டு வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.