முத்துப்பேட்டையில் சமாதான கூட்டம் நடந்தது.
முத்துப்பேட்டையில் நடக்க இருந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ்
- அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
- தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது வழங்கப்படும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போ ராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதற்காக நேற்று அந்த அமைப்பை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கோவிலூர் செயல் அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், போராட்டக்குழு சார்பில் அமைப்பின் மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட தலைவர் துரையரசன், நாகை மாவட்ட தலைவர் விவேக் திரயகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயலாளர் குன்னலூர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தரப்பில் நெல் விவசாயிக்கு வழங்கப்பட்ட தற்காலிக ரசீதை அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசீது பெற்றுக்கொள்ளலாம், தேங்காய்களுக்கு, தேங்காய் பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது தேங்காய்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு வழங்கப்படும், ஆர்.டி.ஆர். பதிவிற்கு விண்ணப்பம் தெரிவிக்கப்படுகிறது என உறுதியளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.