உள்ளூர் செய்திகள்

செல்லப்ப நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு பைப்லைன் அமைத்து குடிநீர் தடுக்கப்பட்டுள்ள காட்சி.

நத்தம் அருகே காவிரி கூட்டுக்குடிநீரை பைப்லைன் மூலம் தடுத்த ஊராட்சி நிர்வாகம்

Published On 2023-08-17 05:56 GMT   |   Update On 2023-08-17 05:56 GMT
  • ஊராளிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக பல விவசாய தோட்டங்களை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
  • காவிரி கூட்டுக்குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் காவிரி குடிநீரை செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் தங்களது ஊராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வந்துகொண்டு இருக்கிறது. அந்த ஊராட்சி வழியாக தான் ஊராளிப்பட்டி ஊராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் பைப்லையன் மூலம் செல்கிறது.

இதை செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றநிர்வாகம் ஊராளிபட்டிக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் பைப் லைனை தடுத்து தங்களது ஊராட்சிக்கே தண்ணீரை திறந்து விடுகிறது என்று நத்தம் யூனியன் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதை யூனியன் ஆணையாளர்களும், அரசு அதிகாரிகளும் பலமுறை சொல்லியும் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் கேட்காமல் மீண்டும் அதே பணியை திரும்பதிரும்ப செய்து வருகின்றனர்.

இதனால் ஊராளிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக பல விவசாய தோட்டங்களை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊராளிபட்டி ஊராட்சி கிராம மக்கள் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News