70 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி
- இன்று காலை சரஸ்வதி அந்த வழியாக நடந்து செல்லும் பொழுது நிலைத்தடுமாறி கிணற்றுக்கள் தவறி விழுந்துவிட்டார்.
- பின்னர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சரஸ்வதியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள ஆயிகவுண்டன் பாளையம், வாணி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.
இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் தனது மகனுடன் அதே பகுதியில் குடியிருந்து, கயிறு திரிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் பொது கிணறு உள்ளது.
70 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தற்போது 2 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இன்று காலை சரஸ்வதி அந்த வழியாக நடந்து செல்லும் பொழுது நிலைத்தடுமாறி கிணற்றுக்கள் தவறி விழுந்துவிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.
பின்னர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சரஸ்வதியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.