உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் பிரகாஷ் மனு அளித்த காட்சி.

பண்ருட்டி அருகே காணாமல் போன குளம்- வாய்க்கால்களை மீட்டு தர வேண்டும்: தாசில்தாரிடம் மனு

Published On 2023-04-21 15:01 IST   |   Update On 2023-04-21 15:01:00 IST
  • அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார்.
  • இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம்.


கடலூர்:

அண்ணா கிராமம் ஒன்றியம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம்அண்ணாகிராமம் ஊராட்சிஒன்றியம் அழகுபெருமாள்குப்பம்ஊராட்சியில் ஊத்து குளம் உள்ளது இந்த குளம் மற்றும்குளத்திற்கு நீர் வரும் நீர்வரத்துவாய்க்கால் ஆகியவைஆக்கிரமிப்புசெய்யப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News