உள்ளூர் செய்திகள்

குப்பை மேட்டை தூய்மைசெய்து கோலமிட்டு விழிப்புணர்வு

குப்பை மேட்டை அகற்றி கோலம் இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர்மன்ற தலைவர்

Published On 2022-06-26 15:28 IST   |   Update On 2022-06-26 15:28:00 IST
  • வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்கிட துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தப்பட்டது.
  • அனைவரும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சீர்காழி:

சீர்காழி நகர்மன்ற தலைவர் பல ஆண்டுகளாக பொதுஇடத்தில் குப்பை கொட்டுப்பட்டு வரும் பகுதியில் குப்பைகளை அகற்றி சுத்தம்செய்து தண்ணீர்தெளித்து, கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சீர்காழி நகராட்சி மற்றும் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சிறப்பு தூய்மை பணி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமே ஸ்வரிராஜசேகரன் தலைமை வகித்தார்.

ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் சாமிநாதன், சுகாதார அலுவலர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள், தூய்மைபணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திடக்கழிவுகளை தனியாக பிரித்து பொதுமக்களிடமிருந்து வீடு, வீடாக தூய்மைபணியாளர்கள் வாங்கிட மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்கிட துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தப்பட்டது. அப்போது பிடாரி வடக்குவீத, தேர் கீழவீதி இணையும் பகுதியில் பலஆண்டுகளாக குப்பைக்கொட்டும்

பகுதியாக இருப்பதால் அதனை தூய்மைபடுத்திட நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி களபணியாளர்களுடன் தானும் இணைந்து குப்பைகள் அகற்றப்பட்டவுடன் அவ்விடத்தை கூட்டி, தண்ணீர் தெளித்து தானே கோலம் வரைந்து என் குப்பை, என் பொறுப்பு என விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.

அப்போது துப்புறவு பணி மேற்பார்வையாளர்கள் வீரப்பன், அலெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News