உள்ளூர் செய்திகள்

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநாட்டில் நிறுவனர் தலைவர் செல்வகுமார் பேசினார்.

பேராவூரணியில் அரசு கயிறு தொழிற்சாலை அமைக்க வேண்டும்; மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2022-09-21 08:23 GMT   |   Update On 2022-09-21 08:23 GMT
  • மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்.

பேராவூரணி:

பேராவூரணி வேதாந்தம் திடலில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் "இடப்பங்கீடு எமது உரிமை விழிப்புணர்வு மாநாடு" நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தஞ்சை சாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தஞ்சை முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாரதி சதீஷ் வரவேற்றார்.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்துசிறப்புரை ஆற்றினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முத்த ரையர்களுக்கு இடப்பங்கீடு வேண்டும்.

அதில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் தனிப்பங்கீடு வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.

இந்த கூட்டத்தில், பேராவூ ரணி பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் இருப்பதால் அரசு கயிறு தொழிற்சாலை மற்றும் கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்படுத்த வேண்டும்.

மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்கிட வேண்டும்.

இரவு நேரங்களில் கூடுதல் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News