உள்ளூர் செய்திகள்

எமரால்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

Published On 2022-12-03 10:32 GMT   |   Update On 2022-12-03 10:32 GMT
  • எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
  • உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு.

இப்பகுதியை சுற்றிலும் நேருநகர், நேருகண்டி, லாரன்ஸ், கோத்தகண்டி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்த எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவ மனைகள் இல்லாததால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை பெற தொலை துாரமுள்ள மஞ்சூர் அல்லது ஊட்டி போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டியுள்ளது.

இதனால் காலவிரயம், கூடுதல் செலவினம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இதையடுத்து சுற்றுவட்டார கிராமங்க ளின் மையப்பகுதியாக உள்ள எமரால்டில் மருத்து வமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் நடந்த விழாவில் காணொளி காட்சி மூலம் மருத்துவமனையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான வசதிகளுடன் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எமரால்டு சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News