உள்ளூர் செய்திகள்
பகண்டை கூட்டுரோடு அருகே வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்
- இதில் பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து பிரச்சினைக்குரிய நிலத்தில் பெருமாள் வீடு கட்டி வருகிறார்.
- அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
களளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அருகே இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள்(46). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் சீனுவாசன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து பிரச்சினைக்குரிய நிலத்தில் பெருமாள் வீடு கட்டி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சீனுவாசன் உள்பட 3 பேர் பெருமாள் புதிதாக கட்டி வரும் வீட்டை கடப்பாரையால் இடித்து சேதப்படுத்தி அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாாின் பேரில் சீனுவாசன், ஏழுமலை மகன்கள் சிவக்குமார், ராஜதுரை, ரத்தினம் மகன் கோபி ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.