உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டினை படத்தில் காணலாம்.

விழுப்புரத்தில் பரபரப்பு:கடப்பாறையினால் கதவை உடைத்துரெயில்வே மெக்கானிக் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

Published On 2023-11-16 13:20 IST   |   Update On 2023-11-16 13:20:00 IST
குடியிறுப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பெரி யார்நகரை சேர்ந்தவர் ஜம்பு (என்கிற) ஜம்புலிங்கம் (வயது 50). இவர் ரெயில்வேயில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சியில் நடைபெறும் பயிற்சிக்காக சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழைந்தைகள் விழுப்புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வீட்டின் மேல்புறம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இரவு ஜம்புலிங்கத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் வந்த மர்மநபர்கள் கடப்பாறையினால் கதவை உடைத்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

இது குறித்து விழுப்புரம் நகர போலீசாரிடம் இன்று காலை புகாரளித்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வர வழைக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவு, பீரோவில் இருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி களில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குடியிறுப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News