உள்ளூர் செய்திகள்

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரம்.

கடையம் அருகே தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் விரட்டியடிப்பு

Published On 2023-02-25 09:01 GMT   |   Update On 2023-02-25 09:01 GMT
  • பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் சுமார் 7 யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக புகுந்தது.
  • வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

7 யானைகள்

இவை அவ்வப்போது மலையையொட்டி அமைந்துள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் குட்டிகளுடன் சுமார் 7 யானைகள் கூட்டமாக புகுந்தது. அங்கு மனோஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 80 தென்னை மரங்களையும், அவரது தோட்டத்தின் அருகே மற்றொரு தோட்டத்தில் 7 தென்னை மரங்களையும் பிடுங்கி எறிந்தது. தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையி னர் வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இது தொடர்பாக வனத்துறை யினர் கூறுகை யில், யானைகள் தோட்டத்தை சேதப்படுத்து வதை அறிந்து 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து யானைகளை காட்டுக்கள் விரட்டி உள்ளோம்.

வன விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க சோலார் மின் வேலியை பராமரித்து அப்பகுதியில் உள்ள அகழியை தூர்வார தேவை யான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம் என்றனர்.

இந்நிலையில் திரவியம் நகர், பெத்தான் பிள்ளை குடியிருப்பு, மேல ஆம்பூர் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News