உள்ளூர் செய்திகள்

பழைய தருமபுரியில் நிற்காமல் சென்றதால் சிறை பிடிக்கப்பட்ட தனியார் பேருந்து.

நிற்காமல் சென்றதால் பேருந்து சிறைபிடிப்பு

Published On 2023-01-18 15:08 IST   |   Update On 2023-01-18 15:08:00 IST
  • தனியார் பேருந்துகள் அன்றாடம் நின்று செல்வது வழக்கம்.
  • கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி,

தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய தருமபுரி பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் அன்றாடம் நின்று செல்வது வழக்கம்.

இந்த வழியாக சென்னை,பெங்களூரு, ஆந்திரா, ஓசூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மாரண்டஹள்ளி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்நிலையில் வெளியூர்களில் வேலை செய்யும் பழைய தருமபுரி மக்கள் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தனர்.

பண்டிகை முடிந்து மீண்டும் வேலைக்காக வெளியில் செல்லும் மக்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்த பொழுது அந்த வழியாக வந்த தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தருமபுரி- கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மதிகோண்பாளையம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இனிவரும் காலங்களில் பேருந்துகள் பழைய தருமபுரி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News