உள்ளூர் செய்திகள்

 நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மானிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்த போது எடுத்தபடம்.

கடையநல்லூர் நகர் முழுவதும் தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும்-முஸ்லிம் லீக் கோரிக்கை

Published On 2022-07-07 08:57 GMT   |   Update On 2022-07-07 08:57 GMT
  • பக்ரீத் பெருநாளன்று குர்பானி கொடுப்பதன் மூலம் ஏற்படும் கழிவுகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அனைத்து வார்டுகளுக்கும் கல்லாற்று தண்ணீரும், தாமிரபரணி ஆற்று தண்ணீரும் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடையநல்லூர்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது,இளைஞர் லீக் மாநில துணைத்தலைவர் ஹபிபுல்லா, நகர செயலாளர் அய்யூப்கான்,தொகுதி செயலாளர் ஹைதர் அலி,கவுன்சிலர் அக்பர் அலி,மாநில பிரதிநிதி துராப்ஷா,அப்துல் சமது,அப்துல் ரகுமான் ஆகியோர் கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மானை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் கல்லாற்று தண்ணீரும், தாமிரபரணி ஆற்று தண்ணீரும் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்ரீத் பண்டிகை விடுமுறை தினத்தில் வருவதால் , பக்ரீத் பெருநாளன்று குர்பானி கொடுப்பதன் மூலம் ஏற்படும் கழிவுகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சீரான குடிநீர் வழங்கிட வேண்டும்.

கடையநல்லூர் முழுவதும் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் கொசு ஸ்பிரே மருந்து அடித்திட வேண்டும்.

12 , 17, 19, 24,33 முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற வார்டு உட்பட நகரின் அனைத்து வார்டுகளுக்கும் பொதுமக்கள் , வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கையையும் நிறைவேற்றிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News