கோவை கலெக்டர் ஆபீசில் சோதனை தீவிரம்
- கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோ–றும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்
- பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரையும் தீவிர சோதனை செய்தனர்.
கோவை,
கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நடந்தது.இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டது.
இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் கோவையில் குவிக்கப்பட்டனர். உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசார் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது கோவையில் அமைதி திரும்பியதை அடுத்து வெளிமாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர்.இருப்பினும் இரவு நேரங்களில் வாகன சோதனை, வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோ–றும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்.இந்த முகாமில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் வந்து தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்து செல்வது வழக்கம்.
மக்கள் குறைதீ ர்ப்பின் போது தீக்குளிக்க முயற்சிப்பது, அத்துமீறி ஆர்ப்பாட் டங்களும் நடைபெறும். இதனை தடுப்பதற்காக கலெக்டர் அலுவல கத்தில் எப்போதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இன்று கலெக்டர் அலுவல கத்தில் வழக்கம் போல் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
மனு அளிப்ப தற்காக ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவ லகத்திற்கு வந்திருந்தனர்.தற்போது கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரையும் தீவிர சோதனை செய்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் உடைமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.