உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவியை படத்தில் காணலாம்.

விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் 6 பதக்கங்கள் பெற்று தென்காசி பள்ளி மாணவி சாதனை

Published On 2023-02-08 13:10 IST   |   Update On 2023-02-08 13:10:00 IST
  • தென்காசி எம்.கே.வி கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
  • 14 வயது பிரிவில் 7-ம் வகுப்பு படிக்கும் சாய் பிரேமா என்ற மாணவி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 6 பதக்கங்களையும், 7 சான்றுகளையும் பெற்றார்.

தென்காசி:

தென்காசி எம்.கே.வி கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வயதுக்கான பிரிவுகளில் பல மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றனர். இவர்களில் 14 வயது பிரிவில் 7-ம் வகுப்பு படிக்கும் சாய் பிரேமா என்ற மாணவி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 6 பதக்கங்களையும், 7 சான்றுகளையும் பெற்றார். 400 மீட்டர் ரிலே ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 80 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடமும், பந்து எறிதல், 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் ஆகியவற்றில் இரண்டாம் இடமும், கைப்பந்து போட்டியில் வெற்றியும் பெற்றார். இவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

Tags:    

Similar News