டாஸ்மாக் கடையில் வாலிபருக்கு கத்தி குத்து
- காயமடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை
கோவை இருகூர் டி.எஸ்.கே நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை தன்னுடன் வேலை பார்க்கும் பிரபு(28) என்பவருடன் ஒண்டிப்புதூர் மேம்பாலம் கீழே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு மது வாங்கி அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்டிட தொழிலாளி பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பர் பிரபுவை குத்தினார். இதில் பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதனால் பயந்து போன கட்டிட தொழிலாளி பிரபு அங்கிருந்து ஓடினார். அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த பிரபுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு வாலிபருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.