உள்ளூர் செய்திகள்
- அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் மீது மோதியது.
- இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சக்கில்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (21). இவர் சூளகிரியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி மாலை அவர் கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் பேரண்டப்ப ள்ளி பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.