உள்ளூர் செய்திகள்
- ரமேஷ் ரேசன் கடையில் பணியாற்றி வந்தார்.
- எதிரே வந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் ஆழியூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவர் வடகரை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். சிக்கல் கீழவீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் பிரபாவதி ( 20). இவர்கள் ரெண்டு பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பாப்பா கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த பிரபாவதி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.