உள்ளூர் செய்திகள்
சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தற்கொலை
- குடிபோதையில் வீட்டுக்கு வந்த முருகன், செல்வராணியிடம் தகராறு செய்தார்.
- இதையடுத்து விரக்தியில் முருகன் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள எட்டிகுட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 32).
இவருக்கு செல்வராணி (27) என்ற மனைவி உள்ளார்.கடந்த 19-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த முருகன், செல்வராணியிடம் தகராறு செய்தார். இதையடுத்து விரக்தியில் முருகன் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை கண்ட அவரது மனைவி மற்றும் உறவி–னர்கள் முருகனை மீட்டு சென்னை சேலம் -தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் பைபாஸ் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.