உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் பள்ளி மாணவிகளை தாக்கிய ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

Published On 2023-04-22 07:53 GMT   |   Update On 2023-04-22 07:53 GMT
  • ஆங்கிலம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று குழந்தைகளை மூங்கில் குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார்
  • ஏலகிரி மலை போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 135-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களின் குழந்தைகள் வருகின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் எபினேசர் மற்றும் ஜீவா என்ற ஆசிரியை இருவரும் பாடம் கற்பித்து வந்துள்ளனர்.

ஜீவா என்ற ஆசிரியை ஆங்கிலம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று குழந்தைகளை மூங்கில் குச்சியில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் குழந்தைகளை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதன் எதிரொலியாக மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வட்டார அலுவலர்கள் ரமணன், வேணுகோபால், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் அப்பள்ளியில் பரபரப்பு நிலவியது. ஆசிரியர்கள் எபினேசர், ஜீவா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News