உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் வீடுகளுக்கு சென்று தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்று நட்டனர்.

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மரக்கன்றுகள் நட்ட ஆசிரியர்கள்

Published On 2023-03-22 09:30 GMT   |   Update On 2023-03-22 09:30 GMT
  • சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர்.
  • மரங்களை நன்றாக வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வனநாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வீரராசு, பொருளாளர் கனகராஜ், துணைத்தலைவர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், சக்திவேல், ஆசிரியர்கள் முருகானந்தம், மாணிக்கம் மற்றும் சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர். பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-

மரங்களை வளர்த்து நன்றாக காய்க்கும் நிலைக்கு கொண்டு வரும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மாணவர்களிடையே மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இப்பணியை செய்வதாகவும், இப்பணி தன் வாழ்நாளில் நிறைவான பணியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News