உள்ளூர் செய்திகள்

காந்தி ஜெயந்தி, மிலாதுநபியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-கோவை கலெக்டர் அறிவிப்பு

Published On 2023-09-25 09:19 GMT   |   Update On 2023-09-25 09:19 GMT
  • 28-ந்தேதி மிலாதுநபி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது.
  • விதிமுறைகளை மீறி அந்த பகுதிகளில் மதுபானம் விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கோவை,

நாடு முழுவதும் செப்டம்பர் 28-ந்தேதி மிலாதுநபி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. எனவே அன்றைய நாட்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இயங்கும் மதுபான கூடங்களும் செயல்படாது. எனவே மேற்கண்ட நாட்களில் விதிமுறைகளை மீறி அந்த பகுதிகளில் மதுபானம் விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News