உள்ளூர் செய்திகள்

காடுவெட்டிபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அமைக்ககூடாது

Published On 2023-01-02 09:03 GMT   |   Update On 2023-01-02 09:03 GMT
  • குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
  • கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர்.

குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது கோவை காடுவெட்டிபாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் சூலூர் அருகே காடுவெட்டி பாளையம் கிராமம் உள்ளது. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இதனிடையே இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக டாஸ்மார்க் கடை ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக மாறும்.

கடை அமைய உள்ள பகுதிக்கு அருகில் பள்ளிகள், பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பஸ் நிலையம் செல்லும் பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டுக்குழு சார்பாக அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் கோடிக்கணக்கில் மதுபானம் விற்பனை நடக்கிறது. இதனிடையே சில தனி நபர்கள் பாட்டிலுக்கு ரூ.2 மாமூல் தர வேண்டும் என மிரட்டுகின்றனர். மாவட்ட கலெக்டர் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News