உள்ளூர் செய்திகள்

குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்தது தமிழக அரசு

Published On 2023-03-13 00:35 IST   |   Update On 2023-03-13 00:35:00 IST
  • தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படுவது குறவன், குறத்தி ஆட்டம்.
  • இந்த ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குறவன், குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறிய வந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News