உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.,

தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பக்ரீத் வாழ்த்து

Published On 2023-06-29 13:53 IST   |   Update On 2023-06-29 13:53:00 IST
  • இல்லாதோருக்கு இயன்றதை கொடுங்கள் என்பதை வலியுறுத்தும் தியாகத் திருநாளாக பக்ரீத் அமைகிறது.
  • அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள். எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்,

நெல்லை:

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

இல்லாதோருக்கு இயன்றதை கொடுங்கள் என்பதை வலியுறுத்தும் தியாகத் திருநாளாக பக்ரீத் அமைகிறது. இன்று, உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன்.

பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து, அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள். துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள். எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்கிற நபிகள் நாயகத்தின் போதனைகளை இன்றைய நாளில் நினைவுகூர்வதில் நானும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Tags:    

Similar News