உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2023-04-13 12:31 IST   |   Update On 2023-04-13 12:31:00 IST
  • கடந்த 19-ந்தேதி காதலி திடீரென சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.
  • உயிருக்கு உயிராக காதலித்தவர் இறந்ததால் மிகவும் மனவேதனையில் தவித்தார்.

பொன்னேரி:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோகித்குமார்(வயது21). கூலித்தொழிலாளி. இவர் மீஞ்சூரை அடுத்த கேசவபுத்தில் தங்கி வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க கட்டுமான பணியில் வேலைபார்த்து வந்தார். இவர் அவரது சொந்த ஊரில் உள்ள இளம்பெண்னை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி காதலி திடீரென சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் ரோகித்குமார் அதிர்ச்சி அடைந்தார். உயிருக்கு உயிராக காதலித்தவர் இறந்ததால் மிகவும் மனவேதனையில் தவித்தார். அவருக்கு உடன் இருந்த நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இதற்கிடையே அறையில் தனியாக இருந்த ரோகித்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து உடன் தங்கி இருந்தவர்கள் வந்த போது ரோகித்குமார் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடை கைப்பறி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் உடன் தங்கியிருந்த நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News